75 நாளில் அடியெடுத்து வைத்த விஜய் சேதுபதியின் '96'!

Last Modified ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (14:25 IST)
வெற்றிகரமாக 75வது நாளில் அடியெடுத்து வைத்த காதல் காவியத்தின் படைப்பான விஜய்சேதுபதியின் 96. 


 
 
நடிகர் விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் 96. பள்ளி வயது காதலை உணர்வுப்பூர்வமாக வடிவமைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இதனை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். அதில் இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க உணர்வுக் குவியலுடன் மெலிதான சோகத்துடன் பார்ப்பவர்களை சீண்டி எடுத்த 96, பார்வையாளர்களின் கண்களை வியர்க்கச் செய்ய தவறவில்லை. 
 
படத்தின் மிகப்பெரும் பக்கபலமாக இருந்தவை இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தாவின் பின்னணி இசையும், பாடல்களும் தான் . 
 
இந்நிலையில் இன்றுடன் 96 திரைப்படம் வெளியாகி 75-வது நாளைக் கடந்திருப்பதாக படத்தின் இயக்குனர் பிரேம் குமார் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.  


இதில் மேலும் படிக்கவும் :