1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (21:06 IST)

'துப்பாக்கி 2' உறுதி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று. இந்த படம் இன்றளவும் விஜய்யின் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி எத்தனை முறை தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பப்பட்டாலும், அத்தனை முறையும் போரடிக்காமல் பார்க்கும் படமாகவும் உள்ளது.

இந்த நிலையில் இன்று முன்னணி சினிமா இணையதளம் நடத்திய விழாவில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், 'கண்டிப்பாக துப்பாக்கி 2' திரைப்படம் உருவாகுவது என்றும், 'துப்பாக்கி' படத்தை போல பலமடங்கு விறுவிறுப்பாக அந்த படம் இருக்கும் என்றும் கூறினார்

அதேபோல் ரஜினி படத்தை இயக்குவதை உறுதி செய்த ஏ.ஆர்.முருகதாஸ்,  தான் இயக்கும் ரஜினியின் படம் அரசியல் படமாக இருக்காது என்றும், ஆனால் அவரது ரசிகர்களை திருப்தி செய்யும் வகையிலான மாஸ் படமாக இருக்கும் என்றும் கூறினார். இன்று முருகதாஸ் அளித்த தகவல் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்த்தக்கது