1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2023 (09:05 IST)

ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #மண்டியிட்ட_உதய் ஹேஷ்டேக்.. என்ன காரணம்?

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி பேசிய நிலையில் அவரது தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் ’அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை என்றும் தனிப்பட்ட முறையில் தான் பேசினேன் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து என்ற #மண்டியிட்ட_உதய் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.  ஆட்சியே போனாலும் பரவாயில்லை சனாதனத்தை எதிர்ப்போம் என்று  கடந்த சில நாட்களுக்கு முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்த நிலையில் தற்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் பேசினேன், அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை என்று கூறி இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  

தனிப்பட்ட முறையில் சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய உதயநிதி, அமைச்சர் என்ற முறையில் சனாதனம் குறித்து தனது கருத்தை தெரிவிப்பாரா? என்று இந்து ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்ற புள்ளி

Edited by Siva