ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளையடித்தவர்கள் ஜெயிலுக்கு போவது உறுதி: முக ஸ்டாலின்
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்தவர்கள் ஜெயிலுக்கு போவது உறுதி என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். ரோடு கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய போது ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்தவர்களும் அதற்கு காரணமானவர்களும் ஜெயிலுக்கு போவது உறுதி என்று பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran