செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (13:31 IST)

ஓபிஎஸ்- ன் தயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

ops mother
முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்- ன் தயார் மறைவுக்கு அரசியல்  தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக  முன்னாள் முதலமைச்சர் மற்றும்  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர் ஓ பன்னீர்செல்வம். இவர் சமீபத்தில், அதிமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு அவரது தயார் உடல் நலக்குறைவால், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு திடீரென அவரது தாயார் என்று காலமானார்.

ஓபிஎஸ்-ன் தயார் மறைவுக்கு அரசியல்  தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
chess stalin

திமுக தலைவரும் முதல்வருமான முக.ஸ்டாலின், ‘’முன்னாள் முதலமைச்சர் அண்ணன்  அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.

ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் முதுமை காரணமாக மறைவெய்தியதை அறிந்து வேதனையடைந்தேன். பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு. ஓபிஎஸ் அவர்கள் தாயார் பழனியம்மாள் காலமான செய்தியறிந்து அவரை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டேன்.

அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன், முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்

அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர்  உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’’என்று தெரிவித்துள்ளார்.