வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (14:20 IST)

பிரபல மால் வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்!

covai
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சக்தி சாலையில் அமைந்துள்ள பிரபல புரோசன் மால் வளாகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக உள்ளது கோயம்புத்தூர் ஆகும். இந்த மாவட்டத்தின் சக்தி சாலையில் அமைந்துள்ள மழைநீர் வடிகாலை அகற்றிய விவகாரத்தில், கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல புரோசன் மால் வளாகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத ரசீதை ஏற்க மறுத்தால் விளக்கமளிக்கவும், அபராதத்தை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்னும் 2 தினங்களில் பதில் அளிக்கவில்லை என்றால், குடி நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடைகளை மூட  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.