தொடர்புடைய செய்திகள்
- ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை.. கைது நடவடிக்கையா?
- தமிழகத்தில் ஜூன் 18 வரை மழை தொடரும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்னும் உயருமா? இன்றைய சென்னை நிலவரம்..!
- இன்றும் நாளையும் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி இருக்கும்?
- இளைஞர் கொலை வழக்கு: நடிகர் தர்ஷன் அதிரடி கைது..!
சென்னை புளியந்தோப்பில் கெட்டுப்போன பிரியாணி வழங்கியதாக மோதல்: 4 பேர் கைது
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கெட்டுப்போன பிரியாணியை வழங்கியதாக கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஐந்து பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுக்கு போலீசார் வலை வீசி உள்ளதாகவும் தெரிகிறது.
சென்னை புளியந்தோப்பில் உள்ள ஒரு பிரியாணி கடையில் இன்று பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பிரிவினர் திடீரென பிரியாணியில் இருந்து கெட்டுப் போன வாடை வருவதாக கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதற்கு கடை ஊழியர்கள் பதில் அளித்த நிலையில் திடீரென வாக்குவாதம் முற்றிய நிலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் போன் செய்து மேலும் சிலரை வரைவழைத்ததாகவும் அதே போல் கடை ஊழியர்களும் சிலரை வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரியாணி கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பிரியாணி சாப்பிட்டவர்கள் மற்றும் கடை ஊழியர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளதாகவும் காவல்துறை என தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
