30க்கும் மேற்பட்ட வழக்குகள்.. கைது செய்யப்படுகிறாரா ஜெகன் மோகன் ரெட்டி?
ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவதற்கு முன்பே அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட மொத்தம் 30 வழக்குகள் அவர் மீது இருப்பதாகவும் இதனை அடுத்து அவரை கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர் ரெட்டி முதல்வராக இருந்த போது சுமார் ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்ததாக ஜெகன்மோகன் ரெட்டி மீது 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ கைது செய்தது. 16 மாதங்கள் சிறையில் இருந்த ஜெகன்மோகன் அதன் ஜாமினில் வெளிவந்தார்.
இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்த 11 வழக்குகள், அமலாக்கத்துறை தொடர்ந்த ஐந்து வழக்குகள் என மொத்தம் 31 வழக்குகள் இப்போதும் நிலுவையில் இருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்ததால் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது முதல்வர் பதவியை இழந்து, எதிர்க்கட்சிக்கு அந்தஸ்து கூட இல்லாத நிலையில் இந்த வழக்குகள் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே முடியாது என்றும் கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அரசு சேர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் கைது செய்யப்படுவது உறுதி என்றும் கூறப்படுவதால் ஆந்திரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva