வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (16:42 IST)

பாலுக்கு பதில் பீர்: போதை தாயின் அட்டூழியம்!!!!

அறந்தாங்கியில் பெண் ஒருவர் குழந்தைக்கு பீர் கொடுத்த சம்பவம் தாய்மார்களை கலக்கமடைய செய்துள்ளது.
 
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை துறவிக்காடு பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி நடாயி(42). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையான நடாயி,  டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கி குடித்துள்ளார்.
 
தான் குடித்தது மட்டுமில்லாமல் தனது ஒன்றரை வயது குழந்தைக்கும் பீரை கொடுத்துள்ளார். இதனை பார்த்த மக்கள் பேரதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அக்குழந்தையை போதை தாயிடமிருந்து மீட்டு சைல்டு லைனில் ஒப்படைத்தனர். கோடான கோடி உன்னதமான தாய்கள் வாழும் இந்நாட்டில் இந்த மாதிரியான கேடுகெட்ட ஜென்மங்களும் இருக்க தான் செய்கிறார்.