1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (19:48 IST)

மாரி2 வில் ஹீரோயின் யார்? சாய் பல்லவியா அறந்தாங்கி நிஷாவா?

மாரி 2 படத்தில் நடித்த அனுபவம் குறித்து அறந்தாங்கி நிஷா பேசியுள்ளார்.
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் மாரி 2 படத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் இப்படத்தில்  நடித்திருக்கின்றனர்.
 
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே மாரி 2 படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக மாரி-2, நாளை மறுதினம் வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய கலக்கப்போவது யார் புகழ் அறந்தாங்கி நிஷா, என்னை வளர்த்துவிட்ட தனுஷுக்கு மிகவும் நன்றி. அவர் ஒரு எளிமையான மனிதர்.
 
இந்த படத்தில் நான் 2வது ஹீரோயினாக நடித்திருக்கிறேன். படத்தின் இயக்குனர் மீது எனக்கு கோபம். ஹீரோயினான சாய் பல்லவிக்கு அளித்தது போல எனக்கும் ஒரு பாடல் கொடுத்திருக்கலாம். என்ன செய்வது? எது எப்படி இருந்தாலும் தனுஷும், இயக்குனர் பாலாஜி மோகனும் ஆர்டிஸ்டுகளை மிகவும் தன்மையாக நடத்தினர் என அவர் பேசினர்.