திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2019 (16:56 IST)

இதற்கு பெண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடலாம்! அறந்தாங்கி நிஷா ஆவேசம்! வைரலாகும் வீடியோ!

பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆவேசப்பட்ட அறந்தாங்கி நிஷா
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காமக்கொடூரன்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருவதையடுத்து தற்போது அறந்தாங்கி நிஷா இச்சம்பவம் குறித்து மிகுந்த ஆவேசத்தோடு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 
 
அதில் அவர் பேசியதாவது, இப்போதுதான் பெண்கள் அடுப்பறையை விட்டு வெளியே வந்து பள்ளி , கல்லூரி , வேலை என வெளிவுலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களை மீண்டும் அடுப்பங்கறைக்கே அனுப்பிவிடாதீர்கள். இது போன்று தொடர்ந்து பெண்களுக்கு அநீதிகள் நடந்துகொண்டே இருந்தால் முன்பை போலவே பெண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொள்ளவேண்டியது தான். ஏனென்றால் 10 , 15 வருடங்களுக்கு பிறகு எவனோ வந்து பெண்களை இப்படி நாசம் செய்வதற்கு பதிலாக நாமே கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடலாம் என ஆவேசமாக கூறியுள்ளார்.