1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:06 IST)

லேடீஸ் பாத்ரூமுக்குள் செல்ல துப்பாக்கியை காட்டி மிரட்டிய எம்.பி. மகன்

டெல்லியில் பெண்கள் கழிவறைக்கு செல்ல முயற்சித்த எம்.பி மகனை தடுத்த பாதுகாவலரை அந்த நபர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பகுஜன சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி ராகேஷ் பாண்டே. இவரது மூத்த மகன் எம்.எல்.ஏ வாக உள்ளார். 
 
இந்நிலையில் இவரது இரண்டாவது மகன் ஆஷிஷ் பாண்டே சமீபத்தில் தோழியுடன் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது ஆஷிஷ் பாண்டே பெண்களின் கழிவறைக்குள் செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு அங்கு இருந்து பெண் பாதுகாவலர் ஆஷிஷ்ஷை தடுத்துள்ளார். 
 
இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காட்டி அந்த பெண் பாதுகாவலரை மிரட்டியுள்ளார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகவே போலீஸார் ஆஷிஷ் பாண்டே மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.