தொடர்புடைய செய்திகள்
- ஓட்டுக்காக தேவர் மகன் 2-வது பாகமா? – கமலுக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி
- விஜய்யை அழைப்பது புலிக்கு பயந்து பூனையை தன் மீது படுக்க கூறுவது போன்றது: பொன்.ராதாகிருஷ்ணன்
- மக்கள் நீதி மய்யம் கட்சியில், நடிகர் விஜய்க்கு இடம் உண்டு: கமல்ஹாசன்
- 'தேவர் மகன் 2': அதிகாரபூர்வமாக அறிவித்த கமல்ஹாசன்
- சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்
இன்னும் தலைப்பு வைக்கவே இல்லை.. அதற்குள் ஏன்? - தேவர் மகன்2 குறித்து கமல் விளக்கம்
தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்திற்கான தலைப்பை தான் இன்னும் உறுதி செய்யவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன், தேவர்மகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் சாதியை கையில் எடுக்கிறார். அரசியல் லாபத்திற்காக சாதியை வைத்து மீண்டும் படம் எடுக்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கமல்ஹாசன் “மதுஒழிப்பை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கினால், கதாநாயகன் குடிகாரனாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இதுவும். தேவர் மகன் 2 என நான் தலைப்பு வைக்க வில்லை. இது இன்னும் முடிவாகவில்லை” என விளக்கம் அளித்தார்.
அடுத்த கட்டுரையில்
