புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (20:10 IST)

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் மன்னிப்பு கேட்ட பிரதமர்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருப்பிடமான அலரிமாளிகை அருகே இரு தற்கொலை அங்கிகள் கண்டுபிடிப்பு எனத்தகவல் வெளியாகிறது.
இலங்கையில் அம்பறை சம்மாந்துறை பகுதியில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்த போலீஸார் தற்போது 7 பேரை கைது செய்துள்ளனர்.வெடிகுண்டு தயாரிப்பதற்கான டெட்டனேட்டர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
மேலும் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் 2வது முறையாக தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பிரதமர் ரணில் கூறியுள்ளதாவது :
 
நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேவாலயங்களில் மறுசீரமைப்பு செய்ய உறுதி ஏற்கிறேன். சர்வதேச நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.கொடிய தாக்குதலில் இருந்து மக்களை காக்க தவறியதற்காக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.