1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. North Korea asking US $ 2 million what is the reason

அமெரிக்காவிடம் 2 மில்லியன் டாலர்கள் கேட்கும் வட கொரியா - காரணம் என்ன?

world
பிரச்சார அடையாளம் ஒன்றினை திருட முயற்சி செய்ததாக வார்ம்பியருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
நீண்ட காலம் கோமாவில் இருந்து பின்னர் உயிரிழந்த அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியரின் மருத்துவ செலவுகளுக்கு அமெரிக்காவிடம், வட கொரியா இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
2015ஆம் ஆண்டு டிசம்பரில் சுற்றுலாவிற்காக சென்ற வார்ம்பியர், வட கொரியாவில் சிறையில் அடைக்கப்பட்டார். 17 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டு கோமா நிலையில் அமெரிக்கா திரும்பிய அவர் அங்கு உயிரிழந்தார்.
 
வார்ம்பியரை அவரது நாட்டிற்கு அனுப்பும் முன்னரே அவரின் மருத்துவ செலவுகளை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்று, வட கொரியா கேட்டது.
 
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.
 
அடுத்த கட்டுரையில்
பொள்ளாச்சி விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வல்லுறவு வழக்கு