வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (20:49 IST)

இலங்கை வழிபாட்டு தலங்களில் மீண்டும் தாக்குதல்! அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று கிறிஸ்துவர்களின் வழிபாட்டுத்தலங்களான தேவாலயங்களில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. மீண்டும் இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் இருப்பதால் தினசரி இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது
 
இந்த நிலையில் இலங்கையில் உள்ள வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதன்காரணமக  இலங்கையில் நாளை முதல் 28ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
 
இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  து செய்யப்பட்டவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது