1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (13:59 IST)

ஈரோடு பவானி ஆற்றில் மிதந்து வந்த தலை துண்டிக்கப்பட்ட உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி..!

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் தலை இல்லாத உடல் ஒன்று மிதந்து வந்துள்ளதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி என்ற பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென  தலை இல்லாத ஒரு உடல் மிதந்து வந்தது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசார்க்கு தகவல் அளித்தனர். போலீசார் தலை இல்லாத அந்த உடலை கைப்பற்றிய நிலையில் அது ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வந்து உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பவானி ஆற்றில் கைப்பற்றப்பட்ட தலையில்லாத உடல் கிடைத்துள்ளதை அடுத்து அந்த பகுதியில் காணாமல் போனவர் குறித்த புகார் மனுக்கள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
 
Edited by Mahendran