வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 25 மார்ச் 2023 (18:59 IST)

'பத்து தல' பட 'ராவடி' பாடலின் வீடியோ ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

pathu thala
'பத்து தல' படத்தின் ராவடி என்ற பாடலின் வீடியோவை படக்குழு இன்று ரிலீஸ் செய்துள்ளது.

கன்னட சினிமாவில் வெளியான மப்டி படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை  ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார்.   நடிகர் சிம்பு மற்றும் கெளதம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்

இப்படத்தின் ஷூட்டிங்  நிறைவடைந்த நிலையில் வரும்  மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இப்பாடலின் முதல் மற்றும் இரண்டாவது சிங்கில் ரிலீஸான நிலையில், சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ வெளீயிடு மற்றும் டிரெயிலர் நிகழ்ச்சி   நடைபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை சாயிஷா நடனமாடியுள்ள  ராவடி என்ற வீடியோ பாடலை படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் கேன்ஸ்டர் கேஜிஆர்-ஆக சிம்புவும், முதல்வராக கெளதம் மேனனும் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில், பிரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக் உள்ளிட்ட   நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.