செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (11:45 IST)

முன்னேற்பாடுகள் தீவிரம்: பெசன்ட் நகர் மயானத்தில் அஜித்தின் தந்தை உடல் தகனம்!

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் இன்று (மார்ச் 24) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84. சென்னையில் மனைவியுடன் வசித்து வந்த இருக்கு நீண்ட காலமாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். 
 
இதனால் கண்டா 3 ஆண்டுகாலமாக அவர் தொடர் சிகிச்சை எடுத்துவந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை தூக்கத்திலே மரணமடைந்துள்ளார்.  இந்தத் தகவல் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
இதையடுத்து அவரது இறுதிச் சடங்கு குடும்பத்திற்குள் நடக்கும் நிகழ்வாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில்‌ செய்யவும்‌ ஒத்துழைக்கும்படி அஜித் குடும்பத்தினர் வேண்டிக்கொண்டுள்ளனர். இன்று மாலை அஜித் தந்தையின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.