செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (11:56 IST)

குடும்பத்தையே கழுத்தறுத்து கொலை செய்த நபர் : சென்னையில் அதிர்ச்சி

கடன் பிரச்சனை காரணமாக, குடும்பத்தையே கொலை செய்த நபர்,  தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள பம்மல் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் விளைவாக குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்தார்.
 
எனவே, தாய் சரஸ்வதிதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோசன், மீனாட்சி என நான்கு பேரையும் நேற்று இரவு கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அவர் மட்டும் உயிர் பிழைத்தார். தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இந்த விவகாரம் பம்மல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.