வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (11:47 IST)

ஆள் தான் ஒரு மாதிரினா சொத்து விவரமும் ஒரு டைப்பா இருக்கே

ஆர்.கே.நகரில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுயேச்சையாக போட்டியிப் போகும் விஷால் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு விவரங்கள் முரண்பாடாக உள்ளது. பெரும்பாலும் 95 சதவீதம் கார்களின் மதிப்பையே அவர் கணக்கு காட்டியுள்ளார்.
அதில் தனக்கு அசையும் சொத்துகளாக ரூ.1.06 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மதிப்பில் பெரும்பாலும் 95 சதவீதம் காரின் மதிப்பே உள்ளது. பிஎம்டபிள்யூ, ஜாகுவார் உள்ளிட்ட 4 கார்களின் விலை ரூ.1 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அசையா சொத்துகள் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்த விஷால் தனக்கு ரூ. 7.5 கோடி அளவில் அடமானக் கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
தன்னிடம் சொத்துகளே இல்லை என்று குறிப்பிட்ட நிலையில் அடமானக் கடன் குறித்த விவரம் முரண்பாடாகவே உள்ளது. இதனால் வேட்பு மனுவில் விஷால் குறிபிட்டுள்ள அவரது சொத்து விபரம் குழப்பத்தை ஏற்பட்டுள்ளது.
 
ஆள் தான் ஒரு மாதிரினா சொத்து விவரமும் ஒரு டைப்பா இருக்கே என வலைதளங்களில் விஷாலை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.