ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (11:27 IST)

சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட தேச துரோகிகள் கைது செய்யப்படுவார்கள்: எல் முருகன்

L Murugan
தேச துரோக செயல்களில் ஈடுபட்ட சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் என்என்.ஐ.ஏ  ன அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை செய்தனர் என்பதும் குறிப்பாக சாட்டை துரைமுருகன்,  இடும்பாவனம் கார்த்திக்  ஆகியோர்கள் வீடுகளில் சோதனை செய்யப்பட்டதாகவும் இந்த சோதனைக்கு பின்னர் விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆயுதம் கடத்திய  வழக்கில் சோதனை செய்யப்பட்டதாகவும் என்.ஐ.ஏ  தெரிவித்தது. 
 
இந்த நிலையில் அமைச்சர் எல் முருகன் இது குறித்து கூறிய போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பல ஆண்டுகளாக நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் என்.ஐ.ஏ  அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் தமிழகப் போலீசாரும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் இதனை அடுத்து சாட்டை துரைமுருகன் உள்ளிட்டவர்களை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
Edited by Siva