ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (15:44 IST)

ரஜினி நடித்துள்ள ''லால் சலாம்'' படத்திற்கு தடைகோரி புகார் மனு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்திற்கு தடைகோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் லால் சலாம்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, விக்ராந்த் விஷ்ணு விஷால் மற்றும் தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,  லால் சலாம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஆர்.டி.ஐ செல்வம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், லால் சலாம் படத்தில் நடித்துள்ள துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால்  இப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும்.  நிம்மதியாக வாழும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தி லால் சலாம் படமெடுத்துள்ள ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.