வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2024 (16:01 IST)

பெண்கள் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன்..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Arrest
சென்னையில் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
சென்னை வடபழனியை சேர்ந்த  பெண் ஒருவர், பாண்டிபஜார் பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். இவர் அங்குள்ள பெண் ஊழியர்கள் பயன்படுத்தும் பாத்ரூமிற்குள் சென்ற போது, ஜன்னலில்  மறைவாக கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில்  செல்போன் இருந்ததை  செல்போன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனடியாக அந்த செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர்,  இளம்பெண்ணை மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், தி.நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞரை கைது செய்து அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

 
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட மணிகண்டன் அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்தவர் என்பதும், அருகில் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூம் ஜன்னலில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.