வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (12:54 IST)

செல்போன்களின் விலை குறைகிறது..! பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!!

Central Budjet
செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவிகிதமாக மத்திய அரசு குறைப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இரண்டாவது முறையாக மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றுக் கொண்டார். 
 
இந்நிலையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.  

குறிப்பாக,  செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவிகிதமாக குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.


மேலும், புற்றுநோய்களுக்கான 3 மருந்துகளின் சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.