வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2024 (15:56 IST)

குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்தக் கூடாது.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு..!!

highcourt
குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கட்டமாக தெரிவித்துள்ளது.
 
நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக செல்வராஜ் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து செல்வராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
மனுதாரர் உதவியுடன் போலி வங்கி கணக்கு தொடங்கப்பட்டதாகவும், போலி ஊதிய சான்று தயாரித்து கொடுக்கப்பட்டதாகவும் இதன் மூலம் ரூ.3 கோடியே 30 லட்சம் வரை மோசடி நடைபெற்றுள்ளது. அனைத்துமே மனுதாரரின் உதவியோடு நடந்துள்ளதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  அனைத்தும் தனிநபர் குற்றம் என்பதால் தனிநபர் குற்றத்தை காரணமாக வைத்து குண்டர் சட்டம் போட முடியாது என்றும் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தனர். 


யார் குண்டர் என்பதை அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுரைகள் வழங்கினர். மேலும் குண்டர் சட்டத்தை தேவை இல்லாமல் சாதாரணமாக பயன்படுத்த கூடாது என்றும்  அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர்.