1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (14:19 IST)

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு.! நிர்மலாதேவி குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு..!

Nirmala Devi
மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளி என  ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள  தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர், நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. 
 
இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி நிர்மலாதேவியை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
நிர்மலாதேவி வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த நிர்மலாதேவி உள்பட 3 பேரும் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர். சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

 
இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், நிர்மலாதேவி குற்றவாளி என  நீதிபதி பகவதி அம்மாள் இன்று தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.