ஸ்டாலின் மீது பாய்ந்த சிறப்பு நீதிமன்றத்தின் முதல் வழக்கு
தமிழக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கு என சிறப்பு நீதிமன்றம் ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டது.
தமிழக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ஒன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஏழு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த வழக்கு இந்த சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.