1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A case against erode east election

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்..!

court
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உட்பட அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க கோரிக்கை அளிக்கப்பட்ட நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி அந்த கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இந்தியா வருகிறார் ஜெர்மனி அதிபர்.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!