1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (15:19 IST)

2024 மக்களவை தேர்தல் தான் கடைசி தேர்தல், அதன் பிறகு மன்னராட்சி; உத்தவ் தாக்கரே

Uttav
2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல்தான் இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும் என்றும் அதன் பிறகு மன்னர் ஆட்சியாக மாறிவிடும் என்றும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கொடுக்கப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே பேசியபோது கட்சியின் பெயர் சின்னம் எல்லாம் திருடப்பட்டு உள்ளது என்றும் ஆனால் தாக்கரே என்ற பெயரை மட்டும் யாராலும் திருட முடியாது என்றும் தெரிவித்தார். 
 
தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டோம் என்றும் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
 
இது போன்ற அரசியல் சூழ்நிலை இந்தியாவில் தொடர்ந்து நடந்தால் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்தான் நாட்டின் கடைசி தேர்தலாக இருக்கும் என்றும் அதன் பிறகு மன்னர் ஆட்சி தொடங்கிவிடும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
 
Edited by Mahendran