வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (14:54 IST)

சாரு ரொம்ப பிசி: வாட்ஸ் அப்பில் மூழ்கியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவர் செல்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்திக்கொண்டே பேருந்தை இயக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்திலிருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தில் நம்மை நம்பி பல பயணிகளும், அவரது குடும்பதாரும் இருக்கின்றனர் என்பதை சிறிதும் உணராமல், தனது செல்போனில் வாட்ஸ் அப் பார்த்தபடியே பேருந்தை இயக்கினார்.
 
இவரது கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு. மனித உயிர்கள்ன்னா அவ்வளவு கேவலமா? டிரைவர் தொழிலில் கவனக்குறைவு என்பது சிறிதும் இருக்கக்கூடாது. அப்படி இருக்கும்போது, ஒரு அரசுப்பேருந்து ஓட்டுனரே இவ்வாறு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டனங்கள் எழுந்து வருகிறது.