கேரளாவில் முழு அடைப்பு: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்
கேரள மாநிலத்தில் ஐயப்பன் கோவில் விவகாரம் கடந்த சில மாதங்களாக இருந்துவரும் நிலையில் இந்த பிரச்சனையை அனைத்து அரசியல்கட்சிகளும், அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றன. மேலும் கடந்த மூன்று மாதங்களில் அவ்வப்போது முழு அடைப்பு நடைபெறுவதால் கேரள மாநில மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்,.
இந்த நிலையில் இன்று கேரள பாஜகவினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து இன்று முழு அடைப்பு நடைபெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இன்றைய முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள: குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து தமிழக அரசு பேருந்துகளும் இருமாநில எல்லைப்பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரளாவுக்கு செல்லும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.