திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 8 டிசம்பர் 2018 (13:32 IST)

பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது பேருந்து : பலி எண்ணிக்கை உயர்வு

வடமாநிலமான ஜம்மு - காஸ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் இருந்து லோரான் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த  பேருந்து ஒன்று மாண்டி டேஹ்ஸில் என்ற பகுதியை நெருங்கிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
மிக ஆழமான பள்ளத்தாக்காக அறியப்பட்ட மாண்டி டெஹ்ஸ் பகுதியில் பேருந்து கவிழ்ந்ததால் அதில் பயணித்த பயணிகளில்  11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் பலர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
இந்த திடீர் விபத்துக்கான காரணம் பற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.