ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2023 (16:12 IST)

மீண்டும் சாதனை படைக்கும் பிரியாணி!

Egg Biryani
இந்த உலகில் எத்தனை வகையான சாப்பாடு இருந்தாலும், பிரியாணி என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று.

அதிலும் இந்தியாவில் உள்ள முக்கிய விஷயங்களின்போது, திருமணத்தின்போது இந்தப் பிரியாணி சமைப்பது என்பது கெளரவமாகவும் பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குழந்தைகள் முதல் இளைஞர், முதியோர் என அனைத்து தரப்பினரும் பிரியாணியை ரிசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் 8 ஆம் ஆண்டமாக தொடர்ந்து பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

நடப்பாண்டில் நொடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 5.5 சிக்கன் பிரியாணிக்கு மத்தியில் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டை ஒட்டி ஸ்விக்கியில்  4.30 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், 2.49 கோடி பேர் முதல் முறையாக ஆர்டர் செய்தது பிரியாணி என்ற தகவல் வெளியாகிறது.