1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:43 IST)

இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தான் எல்லா வேலையும்: நிறைவேறியது மசோதா!

இனிமேல் டிஎன்பிஎஸ்சி மூலம் தான் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் என திருத்தப்பட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
 
தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களை டி.என்.பி.எஸ்.சி-யே இனி நிரப்பும். இதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மசோதா மூலம் இனி அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்கள் அனைத்தும் இனி TNPSC மட்டுமே  மேற்கொள்ளும்  என்பது குறிப்பிடத்தக்கது.