செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:11 IST)

தனுஷின் ‘வாத்தி’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்!

தனுஷ் நடித்து வரும் அடுத்த திரைப்படமான ‘வாத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படம் தனுஷ் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை வெங்கி அட்லுரி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
 
இந்த புகைப்படத்தில் தனுஷ் இளமையாக இருப்பது மட்டுமன்றி அட்டகாசமாகவும் ஸ்டைலான வாத்தியார் ஆகவும் உள்ளது தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.