1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:36 IST)

ஊர் புகுந்து தாக்கிய கரடி? உடல்நல குறைவால் பலி! – தென்காசியில் பரபரப்பு!

Bear
தென்காசியில் பலரை தாக்கி பீதியை ஏற்படுத்தி வந்த கரடி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே காட்டுப்பகுதியில் நடமாடி வந்த கரடி ஒன்று மக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் தென்பட்டு வந்தது. இந்த கரடி கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அப்பகுதியில் சென்ற மக்கள் சிலரை தாக்கியுள்ளது. கரடி தாக்கியதால் இதுவரை 3 பேர் காயமடைந்துள்ளனர்.


இந்நிலையில் கரடியை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கிய வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நேற்று முன் தினம் அந்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்தனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அந்த கரடி களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.

ஆனால் கடந்த 2 நாட்களாகவே உடல் சோர்வுடன் காணப்பட்ட அந்த கரடி இன்று உயிரிழந்துள்ளது. நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கரடி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K