திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (09:41 IST)

தூங்கியபோது திடீரென வெடித்த ஃப்ரிட்ஜ்! 3 பேர் உடல் கருகி பலி! – சென்னையில் சோகம்!

accident
சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் குளிர்சாதன பெட்டி வெடித்ததில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் உள்ள கோதண்டராமன் நகரை சேர்ந்தவர் கிரிஜா. நேற்று கிரிஜா, கிரிஜாவின் தங்கை ராதா மற்றும் அவரது உறவினரான ராஜ்குமார் ஆகியோர் அவரது வீட்டில் இரவு உறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கிருந்த குளிர்சாதன பெட்டியின் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிந்துள்ளது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

கேஸ் கசிவால் ஏற்பட்ட தீயில் சிக்கிய மூவரும் பரிதாபமாக கருகி இறந்துள்ளனர். கிரிஜாவின் வீட்டிலிருந்து புகை வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீஸாரும் விரைந்துள்ளனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மூவருமே தீயில் கருகி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edited by Prasanth.K