வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 29 நவம்பர் 2018 (18:24 IST)

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்   என்ற படத்தில் பிரபல சீரியல் நடிகர் பிரஜினுக்கு  ஜோடியாக நடித்துள்ளவர் ரியாமிகா. 
 
தயாநந்தன் என்ற புதுமுக இயக்குநர் இந்த படத்தை  இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. 
 
இந்நிலையில் ரியாமிகா சென்னையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கு காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.