செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:43 IST)

சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தடை செய்ய கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு

சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும் என அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்கம் சார்பில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்க செயலாளர் கன்யா பாபு  இது தொடர்பாக அளித்த பேட்டியில், 
 
சன் லைப் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளதாக உள்ளது. குழந்தைகளுடன் உட்கார்ந்து கண்டிப்பாக பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமாக  உள்ளது எனவே,சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை  தடை செய்ய வேண்டும் என புகார் அளித்தோம் என்றார்.