செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 நவம்பர் 2018 (14:57 IST)

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: பீதியை கிளப்பும் வானிலை ஆய்வு மையம்

கஜா புயலில் இருந்தே தமிழக டெல்டா மாவட்ட மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்து தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். 
 
தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவிழந்து விட்டதால் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. ஆனால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
 
கிழக்கு திசையில் காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், கடலோர மாவட்டங்களில் நவம்பர் 30 ஆம் தேதியும், டிசம்பர் 1 ஆம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனோடு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 
 
கஜா பாதிப்புகளே இன்னும் சரி செய்யப்படாத நிலையில் தமிழகத்துக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.