வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (09:08 IST)

9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!! அமெரிக்காவில் அதிசயம்

அமெரிக்காவில் பெண் ஒருவர் 9 நிமிட இடைவெளியில் 6 குழந்தைகளை பெற்றெடுத்தது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் தெல்மா சியாகா. இந்த பெண்மணி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் சமீபத்தில் டெக்சாஸில் உள்ள வுமன்ஸ் ஆஸ்பிட்டல் ஆஃப் டெக்சாஸ் எனும் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் அந்த பெணிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணியிலிருந்து 4.59 மணி இடைவெளிக்குள் நான்கு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். இருப்பினும் குழந்தைகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இது 490 கோடி பிறப்புகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம் என சொல்லப்படுகிறது.