1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (16:45 IST)

ஆயிரத்தை நெருங்கும் செங்கல்பட்டு மாவட்டம்: அதிரடி நடவடிக்கும் எடுக்கும் அதிகாரிகள்

சென்னை போலவே சென்னையின் அண்டை மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
 
இந்த நிலையில் சென்னையின் அண்டை மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுவிடும் நிலையில் இருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 989 ஆக உயர்ந்துள்ளதாகவும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 56 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் அதிரடி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சீரிய முறையில் செயல்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருபவர்கள் கொரோனா தொற்று இல்லையெனினும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.