ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (09:22 IST)

மீண்டும் கூவத்தூர்; 98 எம்எல்ஏக்கள் ஓபிஎஸுக்கு ஆதரவு!

மீண்டும் கூவத்தூர்; 98 எம்எல்ஏக்கள் ஓபிஎஸுக்கு ஆதரவு!

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதும் எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்து எடப்பாடி பழனிச்சமியை முதல்வராக்கினார் சசிகலா.


 
 
ஆனாலும் ஓபிஎஸ் அணிக்கு 11 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெரும் அணி கட்சியை கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
 
இதனையடுத்து ஆர்கே நகரில் தினகரனை விட ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக கள தகவல்கள் வருகின்றன. இதனை வைத்து தினகரன் அணியில் உள்ள பல எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு வர இருப்பதாக இப்போதே பேச ஆர்ம்பித்து விட்டார்கள்.
 
இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓபிஎஸ் அணியின் கே.சி. பழனிச்சாமி அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
தமிழகம் மீண்டும் ஒரு கூவத்தூர் நிகழ்வை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் சந்திக்கும். அப்போது ஓபிஎஸ் அணிக்கு 98 எம்எல்ஏக்கள் ஆதரவளித்து வருவார்கள். மேலும் திமுகவில் உள்ள அதிமுகவின் மாஜிக்கள் கூட வருவார்கள் என கே.சி.பழனிச்சாமி கூறினார்.