1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 9 people escaped with corona positive

மாயமான 9 கொரோனா நோயாளிகள்… ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் இருந்த 9 கொரோனா நோயாளிகள் மாயமாகி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 82 போலிஸாரை பிடித்து அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டனர். அந்த 82 பேரிடமும் செல்போன் எண் மற்றும் முகவரி வாங்கி அனுப்பியுள்ளனர். கொரோனா சோதனை முடிவுகள் வந்த வுடன் அதில் பலருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்ததால் அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் 9 பேர் தவறான செல்போன் எண் மற்றும் முகவரி கொடுத்துள்ளனர். இதனால் அவர்களை ட்ராக் செய்வது கடினமாகியுள்ளது. அந்த 9 பேர் கொரோனா தொற்றோடு இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது பதற்றத்தை உருவாக்கியுள்ளது.