என் காலடி பட்டால்தான் இந்தியாவை விட்டு கொரோனா போகும்: நித்யானந்தா
என் காலடி இந்தியாவில் பட்டால் தான் நாட்டை விட்டு கொரோனா போகும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா எனும் கிருமி நாட்டிற்குள் நுழைய தன்னை ஊரை விட்டு விரட்டியதே காரணம் என்றும் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
கொரோனா என்னும் கிருமி இந்தியாவிற்குள் வரக்கூடாது என்பதற்காக 2020 இல் பாரதம் முழுவதும் பன்னிரு ஜோதிர் லிங்கம் பாதயாத்திரையை செய்திடவே என்மகன் மூலமாய் திட்டமிட்டிருந்தேன். படுபாவிகள் என்னை நாட்டை விட்டே துரத்தினார்கள். இப்போது என்ன நடக்கிறது என்று பார்
முறையாக கைலாய நாட்டின் தலைவனாக என்னை மரியாதையோடு நல்மதிப்போடு நித்தியானந்தன் திருவடி மீண்டும் பாரதத்தில் பாதயாத்திரை செய்தபிறகு மட்டுமே கொரோனா இந்தியாவை விட்டு செல்லும் என்று நித்யானந்தா கூறியுள்ளார்.