வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 13 மே 2024 (17:12 IST)

சிறுமி கூட்டு பாலியல் வழக்கில் 9 பேர் கைது.! மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமையா.?

Girl Rape
திருப்பூரில் 17வது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 
 
இதுகுறித்து சிறுமியிடம் உறவினர்கள் விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் ஜெய காளீஸ்வரன்(வயது 19), மதன்குமார்( 19), பரணி குமார்( 21), பிரகாஷ் (24), நந்தகோபால்( 19 ), பவா பாரதி (22) மற்றும், 14, 15. மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 
இதனிடையே சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதான 9 பேருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.