1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (14:31 IST)

இன்னும் ஓரிரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: எங்கு தெரியுமா?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு. 

 
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி கடலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், ஆகிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.