1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain today

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை!

தமிழகம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தகவல். 

 
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவையில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆர்யன் கான் வழக்கை அவசர வழக்காக எடுக்க மும்பை நீதிமன்றம் ஒப்புதல்!