1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (21:07 IST)

சுடுதண்ணீர் வைத்து தர மறுத்த மனைவியை கொலை செய்த 80 வயது முதியவர்!

மனைவியை கொலை செய்த 80 வயது முதியவர்!
சங்கரன்கோவில் அருகே சுடுதண்ணீர் வைத்து தர மறுத்த மனைவியை கோடாலியால் வெட்டி கொலை செய்த 80 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சங்கரன்கோவில் அருகே 80 வயது பொன்னுச்சாமி என்பவருக்கு ஆவுடையம்மாள் என்ற முதல் மனைவியும், சீதாலட்சுமி என்ற இரண்டாவது மனைவியும் உள்ளனர்.
 
இந்த நிலையில், உடல்நலம் குன்றிய நிலையில் பொன்னுச்சாமி தனக்கு சுடுதண்ணீர் வைத்து தருமாறு இரண்டாவது மனைவி சீதாலட்சுமியிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி நேற்று இரவு சீதாலட்சுமி தூங்கி கொண்டிருந்தபோது அவரது தலையில் கோடாறியால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தலைமறைவாக இருந்த பொன்னுச்சாமியை இன்று காலை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 80 வயதில் கோடாரியால் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது